Home /News /entertainment /

பாடும் நிலா... எஸ்.பி.பியின் எவர் கிரீன் பாடல்கள்! (Playlist)

பாடும் நிலா... எஸ்.பி.பியின் எவர் கிரீன் பாடல்கள்! (Playlist)

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ரிப்பீட் மோடில் வைத்துக் கேட்டாலும் சளிக்காத அவரின் குரல் வளத்தால் கட்டிப்போட்ட சில பாடல்கள் உங்களுக்காக...

    ஸ்வரங்களின் நாயகனாக திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை ( இன்று ) உயிர் பிரிந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. ஒவ்வொருவரின் இல்லங்களிலும் இவரின் குரல் ஒலிக்காத நாட்களே இல்லை எனலாம்.

    அந்த அளவிற்கு அவரின் பாடல்கள் அனைத்து உணர்ச்சிகளையும் கொண்டிருக்கும். அந்தவகையில் எப்போது ரிப்பீட் மோடில் வைத்துக் கேட்டாலும் சளிக்காத அவரின் குரல் வளத்தால் கட்டிப்போட்ட சில பாடல்கள் உங்களுக்காக...



    மலையோரம் வீசும் காற்று : இந்த பாடலை இரவு மெல்லியக் குளிர் காற்றுடன் கேட்கும்போது பல நீங்கா நினைவுகளை தட்டி எழுப்பக்கூடியதாக இருக்கும்.



    மடை திறந்து : இந்த பாடல் தொய்வான நேரத்தில் கேட்கும்போது புது உற்சாகத்தை அளிக்க கூடிய பாடல்.




    வளையோசை : இந்த பாடல் 80களில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல 90ஸ் கிட்ஸுகளுக்கும் மிகவும் பிடித்த பாடல் எனலாம். இன்றும் பலரின் பிளே லிஸ்டில் ஃபேவரட் பாடலாக இருக்கும்.



    சுந்தரி கண்ணால் ஒரு சேதி : காதல் சோகத்தில் இருக்கும் பலருக்கும் இந்த பாடலை கேட்கும்போது ஒரு வித மன ஆறுதலை தரும்.



    காதல் ரோஜாவே : காதல் பிரிவு வாட்டும்போது இந்த பாடலை கேட்டால் எப்பேர்பட்ட கல் நெஞ்சம் கொண்டவர்களையும் இந்த கணத்த குரல் ஒரு துளி கண்ணீரையேனும் வர வழைத்துவிடும்



    ராகங்கள் பதினாறு : எஸ்.பி.பி எந்த மேடையில் பாடல் பாடினாலும் அவருடைய விருப்பமான பட்டியலில் இந்த பாடலும் கட்டாயம் இடம் பெறும்



    மண்ணில் இந்த காதலின்றி : இந்த பாடலை மூச்சு விடாமல் பாடித்தான் கின்னஸ் சாதனை படைத்தார். இது பட்டிதொட்டியெங்கும் கலக்கிய பாடல்.



    வெள்ளி மலரே : வைரமுத்துவின் வரிகளை சற்றும் சாரம் மாறாமல் பாடியிருப்பார். கேட்க இரு காதுகள் போதவில்லையே என்று உணர்வுதான் இறுதியில் மிஞ்சும்.

     



    ரம்பம்பம் ஆரம்பம் : இந்த பாடலை எஸ்.பி.பி எத்தனை முறை மேடைகளில் பாடினாலும் அந்த உற்சாகத்தை சற்றும் குறைக்க மாட்டார். பாட்டில் வெளிப்படும் உற்சாகத்தை அவரின் உடல் பாவனைகளிலும், முகத்திலும் காணலாம்.



    ஒருவன் ஒருவன் முதலாளி : இந்த பாடல் வரிகள் வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை மிக அழகாக உணர்த்தும். அதை வார்த்தை பிறழ்ச்சியின்றி கம்பீரக் குரலில் பாடியிருப்பார் எஸ்.பி.பி. இந்த பாடலும் அவருடைய மேடைப்பாடல்களில் முக்கிய இடம் பிடிக்கும்
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி