காஞ்சி மடத்துக்கு தனது வீட்டைத் தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

காஞ்சி மடத்துக்கு தனது வீட்டைத் தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • Share this:
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது சொந்த வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கியுள்ளார்.

1946-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இதுவரை 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இவருக்கு நெல்லூரில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. திரைத்துறையில் அறிமுகமான பின்னர் அவர் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டதால் நெல்லூரில் இருக்கும் வீடு பூட்டியே கிடந்ததாகக் கூறப்படுகிறது. தனது பரம்பரை சொத்து என்பதால் அதை விற்க மனமில்லாத எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்க இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்த வீட்டை அவர் காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில் அவர் தனது வீட்டை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த வீட்டில் காஞ்சி மடம் சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான் மனு: ஜி.எஸ்.டி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading