நான் தனி மரமாக நிற்கிறேன் - எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்

எஸ்.ஏ.சந்திரசேகர்

தான் தனிமரமாக நிற்பதாக விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை வடபழனியில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய 101-வது நாள் கொரோனா உதவி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்கள் சேவகர்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் அதை மறந்து விடுகிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் ஏன் தண்டனைகள் வழங்கப்படவில்லை. கடந்த காலத்தை விட்டுவிட்டு வரும் காலத்தில் சமூக நோக்கத்தோடு வரும் இளைஞர்களுக்கு பாலமாக இருப்பேன்.

நல்ல எண்ணத்தில் தான் ஒரு பாதையை உருவாக்கி உள்ளேன். சமூக உணர்வுள்ள அத்தனை இளைஞர்களும் பொங்கி வாருங்கள். உங்களுக்கு நான் அடித்தளமாக இருப்பேனே தவிர தலைவனாக இருக்க மாட்டேன்.

என் கணக்கு எப்போதும் தப்பானதில்லை. இப்போது மட்டும் எப்படி தப்பாகும். எப்போதும் நான் ஆளும் கட்சியுடன் இருக்க மாட்டேன். எதிர்க் கட்சியுடன் தான் இருப்பேன். அப்போது தான் எதிர்நீச்சல் போட முடியும். என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என கூறலாம். ஆனால் என்னுடன் பயணிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.எல்லோரும் சுயநலமாக மாறிவிட்டனர். சம்பாதித்தது போதும் இனிமேல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நான் தற்போது தனி மரமாக நிற்கிறேன். ஆனால் இது வேரூன்றி நின்ற மரம். தோப்பாக வேண்டும் எனில் சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் வர வேண்டும். இன்றைய தொண்டன் நாளைய தலைவன் என்பது விதி. இன்று தொண்டு செய்தால் நாளை தலைவனாக வருவார்கள்.” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

புதிதாக துவங்க உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள் விலகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் தொடர்ந்து அமைப்பு செயல்படும் எனவும் கூறினார்

மேலும் படிக்க: நடிகர் தவசிக்கு சிம்பு ரூ.1 லட்சம் நிதியுதவி..

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். கட்சியின் தலைவராக பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா, பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

கட்சி குறித்த தகவல் வெளியான சில மணி நேரங்களில், கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை. ரசிகர்கள், நிர்வாகிகள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று விஜய் அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து பொருளாளர் பொறுப்பில் இருந்த விஜய்யின் தாயார் ஷோபா விலகிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தற்போது கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: