காசுக்காக பொய் சொல்கிறார்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர் காட்டம்

பணத்துக்காக 1 சதவீதம் கூட உண்மையில்லாத செய்திகள் பரப்பப்படுவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

காசுக்காக பொய் சொல்கிறார்கள் - எஸ்.ஏ.சந்திரசேகர் காட்டம்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்
  • Share this:
பணத்துக்காக பொய் செய்தி பரப்புபவர்கள் மீது புகார் அளிக்கப் போவதாக இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைக் கூட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய திரைப்பிரபலங்களை கட்சியில் இணைத்து தேர்தல் பிரசாரத்துக்கு அவர்களை பயன்படுத்தவும், ஒரு சிலரை சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக களத்தில் இறக்கவும் முடிவு செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதை அவர் முற்றிலும் மறுத்திருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று ‘நானும் விஜய்யும் டெல்லி போகிறோம்’ என எஸ்.ஏ.சந்திரசேகர் பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.


மேலும் படிக்க: ‘இதுவும் கடந்து போகும்..’ - பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை

இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பணத்துக்காக 1 சதவீதம் கூட உண்மையில்லாத செய்திகள் பரப்பப்படுவதாகவும் எல்லாமே பொய் எனவும் மறுத்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது புகார் அளிக்க போவதாகவும் காட்டமாகக் கூறினார்.


கடந்த 2019-ம் ஆண்டு ‘கேப்மாரி’ படத்தை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
First published: October 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading