Home /News /entertainment /

’புரட்சி இயக்குநர்’ எஸ்.ஏ.சந்திரசேகர் மகனுக்காக கமர்சியல் குதிரையான கதை!

’புரட்சி இயக்குநர்’ எஸ்.ஏ.சந்திரசேகர் மகனுக்காக கமர்சியல் குதிரையான கதை!

எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர்

அரசியல் படங்களில் சொல்லி அடித்த கில்லியாய் பெயரெடுத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அதன்பின் தன் மகன் விஜய்க்காக பக்கா கமர்சியல் குதிரையில் பயணிக்கலானார். ’

    வெள்ளித்திரையில் முதன்முதலாக சட்டத்தின் இருட்டறைகளை வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பிறந்த நாளான இன்று அவரின் திரைப்பயணங்களைப் பற்றிய பதிவு. 

    பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு ஒரு இயக்குனராக வெற்றிக்கனியை பறிக்க போராடிக் கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஒரு வெளிச்ச கீற்றாய் விஜயகாந்தின் நட்பு கிடைக்கவே தன் படத்திற்கு விஜயகாந்தை நாயகனாக்கினார் எஸ்.ஏ.சந்திரசேகர். அத்திரைப்படம் தான் சட்டத்தின் ஓட்டைகளை திரை ரசிகர்களுக்கு சொல்லி தமிழக பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய ’சட்டம் ஒரு இருட்டறை’.

    நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    தன் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் நீதியையும்…சட்டத்தின் மறுபக்கத்தையும் கமர்சியலில் கலந்து சினிமா ரசிகர்களுக்கு படைத்திட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். ‘சாட்சி’, ‘நீதிக்கு தண்டனை’, ’நீதியின் மறுபக்கம்’, ‘இது எங்கள் நீதி’ என வரிசையாக இவர் எடுத்த திரைப்படங்கள் நீதிமன்றங்களில் புயல் அடித்த கதைகளை சொன்னது.

    s a chandrasekar movie actor vijay father director s a chandrasekar birthday special his first movie hero vijayakanth
    மகன் விஜய்யுடன் எஸ். ஏ சந்திரசேகர்


    அரசியல் சதிராட்டங்களை அப்பட்டமாய் சொல்லி விரைவில் மார்க்கெட் வேல்யூ கொண்ட இயக்குனர் என்று பேரெடுத்த இயக்குநர்களின் பட்டியலில் எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்தார் .தன் திரைப்படங்களில் தன் மகனான விஜயை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கிய ‘ நாளைய தீர்ப்பு’ மூலம் விஜயை கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.

    COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு!

    அரசியல் படங்களில் சொல்லி அடித்த கில்லியாய் பெயரெடுத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அதன்பின் தன் மகன் விஜய்க்காக பக்கா கமர்சியல் குதிரையில் பயணிக்கலானார். ’’ரசிகன்’, ’தேவா’, ‘விஷ்ணு’, ’மாண்பு மிகு மாணவன்’ என தொடர்ச்சியாக விஜய் நாயகனாக நடித்த திரைப்படங்களை இயக்கி தந்தை மகனுக்காற்றும் உதவியை செய்தார்.

    s a chandrasekar movie actor vijay father director s a chandrasekar birthday special his first movie hero vijayakanth
    எஸ்.ஏ சந்திரசேகர்


    விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்க விஜய் கதாநாயகனாக நடித்த ’செந்தூர பாண்டி’…… சிவாஜி கணேசனோடு விஜய் நடித்த ’ஒன்ஸ்மோர்’ என எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. குறிப்பாக இவர் இயக்கிய ‘ நெஞ்சினிலே’ திரைப்படம் கமர்சியலாய் கல்லா கட்டியது.

    ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ‘மாநாடு’ உட்பட பல திரைப்படங்களில் ஒரு நடிகராகவும் முத்திரை பதித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டத்தின் ஓட்டைகளை துணிச்சலாக தன் திரைப்படங்களில் காட்டிய எஸ்.ஏ.சந்திரசேகரை ‘புரட்சி இயக்குனர்’ எனவும் பாராட்டி பட்டம் கொடுத்தது தமிழ் சினிமா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Vijay, Sa chandrahekhar, Tamil Cinema

    அடுத்த செய்தி