விஜய் ஒன்றும் குழந்தை அல்ல...! ‘உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசியது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்

Kamal 60 Ungal Naan Function | SA Chandrasekar Speech

விஜய் ஒன்றும் குழந்தை அல்ல...! ‘உங்கள் நான்’ நிகழ்ச்சியில் பேசியது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
Kamal 60 Ungal Naan Function | SA Chandrasekar Speech
  • News18
  • Last Updated: November 18, 2019, 1:43 PM IST
  • Share this:
‘உங்கள் நான்’ நிகழ்ச்சியில் தான் பேசிய அரசியல் கருத்துகள் குறித்து இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு சினிமா பயணத்தை கவுரவிக்கும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், "உங்கள் நான்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி, இளையராஜா, விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகர் விஜய் மற்றும் அஜித்துக்கு அழைப்பிதழ் அனுப்பபட்ட நிலையில் இருவரும் பங்கேற்கவில்லை.


ஆனால் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கோடான கோடி ரசிகர்கள் காத்திருப்பதாக கூறிய அவர், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது என்றார்.

மேலும் பேசிய அவர், அரசியலில் பின்னால் இருந்து குத்துபவர்கள் தான் அதிகம். ஆனால் நாங்கள் பின்னால் இருந்து பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் இருவரும் ஆண்டது போதும் என நினைத்த பிறகு உங்கள் தம்பிகள் வந்தால் வழிவிட வேண்டும் என ரஜினி மற்றும் கமலுக்கு வேண்டுகோள் வைத்தார்.

மேலும் படிக்க: விஜய் அரசியல் என்ட்ரியை சூசகமாக சொன்ன எஸ்.ஏ.சி - சரத்குமார் பதிலடி!இந்நிலையில் தனது பேச்சு குறித்து நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “ரஜினி - கமல் இணைய வேண்டும் என்று என் ஆசையை கூறினேன். சமூகப் பார்வையில் படம் எடுத்த ஒரு தமிழனாக மேடையில் ஏறினேன். நேற்று பேசிய எந்த கருத்துக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே மேடையில் பார்த்தேன். ஏன் இந்த மேடையை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று எனக்கு தோன்றியது.

மேடையில் ஏறுவதற்கு முன்பதாக விஜயுடன் நான் பேசவில்லை. அரசியல்ரீதியாக அவர் எதுவும் சொல்வதும் கிடையாது . நானும் பேசுவதும் கிடையாது.

நான் பேசும்போது எந்த இடத்திலும் நான் விஜய் ரசிகர்கள் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் ஒரு நல்ல தலைவர் வேண்டும். ஆளுமை மிக்க ஒரு தலைமை வராதா? புதியவர்கள் வரமாட்டார்களா? என்ற எதிர்ப்பார்ப்போடு ஒட்டுமொத்த தமிழகமும் இருக்கிறது என்று பேசினேன்.

இளைஞர் என்றால், விஜய் ரசிகர், சூர்யா ரசிகர் எல்லோருமே இளைஞர்கள் தானே. நான் எடப்பாடி அவர்களை தமிழகத்தின் தந்தை என்று சொல்லவில்லை. தமிழகத்திற்கு யார் முதல்வரோ அவர் தந்தை போன்றவர் என்று தான் தெரிவித்தேன்.

இதையும் படிங்க: நீங்கள் வாய்ப்பு கொடுத்த உடனேயே எனக்கு விடிந்துவிட்டது - கமல் 60 நிகழ்ச்சியில் வடிவேலு நெகிழ்ச்சி

இதே கருத்தை ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். வாக்களிக்காதவர்களுக்கும் நான் தான் முதல்வர் என்று தெரிவித்திருக்கிறார். ஊழல் இல்லாத அராஜகம் இல்லாத ஆட்சியை ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தரவேண்டும் என்று அவர்களுக்குத் தான் சொன்னேன்.

தம்பிக்கு வழிவிடுங்கள் என்று சொல்லவில்லை தம்பிமார்களுக்கு வழி விடுங்கள் என்று சொன்னேன். அவர்களுக்குப் பிறகு எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். அதன் அடிப்படையில் பேசினேன். ஒரு கட்சி இரண்டு வருடம் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும். அப்படி சட்டம் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .

புதிதாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் அவர்கள் அவ்வளவுதான். எனவே வெற்றி பெற வேண்டும் என்றால் பலம்பொருந்திய இருவரும் இணைந்தால் நிச்சயிக்கப்பட்ட வெற்றியாக இருக்கும்.

புகைப்படங்களைப் பார்க்க கிளிக் செய்க: ‘வாவ்’ சொல்ல வைக்கும் பிக்பாஸ் ஷெரின் - கிளாமர் போட்டோஸ்!

முதலில் இருவரும் இணைய வேண்டும் ரஜினி கமல் வடக்கு - தெற்கு போன்றவர்கள் எனவே என் ஆசையை சொல்லிவிட்டேன். அதை முதலில் ரஜினியும் கமலும் யோசிக்க வேண்டும். பிறகு இணைய வேண்டும் அப்படியே இணைய நினைத்தாலும் சுற்றி இருக்கக் கூடிய அரசியல் அவர்களை இணைய விடாது. குதிரை பேரம் எல்லாம் நடக்கும். அதையும் மீறி அவர்கள் இணைய வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார்.

இருவரும் இணைந்தால் விஜயின் ஆதரவு இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகர்,“அதை விஜய் தான் முடிவு எடுப்பார் . நான் வலியுறுத்தும் அளவிற்கு விஜய் ஒன்றும் குழந்தை அல்ல. எனவே அவர் என்ன முடிவெடுப்பார் என சொல்லவும் முடியாது நான் அவருக்கு அறிவுரை கூற மாட்டேன்” என்றார்.
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading