மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!

சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசால் தான் முடியும். சமீபகாலத்தில் சினிமா துறையில் வியாபாரிகள் வந்துவிட்டனர் என்றார் சந்திரசேகர்.

news18
Updated: February 8, 2019, 5:55 PM IST
மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி!
விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்
news18
Updated: February 8, 2019, 5:55 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு. இதில் அனைவரும் தெளிவாக உள்ளனர் என்று நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தில் இயக்குநர் சந்திரசேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுளாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். அப்போது நாணயம் இருந்தது. தற்போது 'தமிழ் ராக்கர்ஸ்’ படங்களைப் போட்டி போட்டு சமூக வலைதளங்களில் வெளிடுவதால்தான் சினிமா அழிந்து வருகிறது.

சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசால் தான் முடியும். சமீபகாலத்தில் சினிமா துறையில் வியாபாரிகள் வந்துவிட்டனர். சினிமா என்பது காதலித்து செய்யக் கூடியது. தமிழ் ராக்கர்சை அரசால் தான் ஒழிக்க முடியும்.

வரும் மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எனது மகன் விஜய்யை டாக்டராக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் ஆக்டராகிவிட்டார் என்றார் சந்திரசேகர்.

Also watch

First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...