ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உக்ரைனுக்கு எதிரான போரை கண்டித்து ரஷ்ய பாடகர் தற்கொலை… சர்வதேச அளவில் பரபரப்பு

உக்ரைனுக்கு எதிரான போரை கண்டித்து ரஷ்ய பாடகர் தற்கொலை… சர்வதேச அளவில் பரபரப்பு

தற்கொலை செய்து கொண்ட ரஷ்ய பாடகர் இவான் விடாலிவிக் பெடுனின்

தற்கொலை செய்து கொண்ட ரஷ்ய பாடகர் இவான் விடாலிவிக் பெடுனின்

என்மீது அன்பு கொண்டவர்களே, என்னை மன்னித்து விடுங்கள். சில சமயம் நீங்கள் கொண்ட கொள்கைக்காக மரணிக்க நேரிடும்’ என்று கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உக்ரைனை எதிர்த்து ரஷ்யா நடத்தி வரும் போரை கண்டித்து ரஷ்ய பாடகர் இவான் விடாலிவெச் பெடுனின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போரை நடத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

  இரு நாடுகளின் போர் காரணமாக சர்வதேச அளவில் உணவுப்பொருள், சமையல் எண்ணெய் உளப்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அவை விலையேற்றம் கண்டன.

  உக்ரைன் போரை தீர்த்துவைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. ஆத்திரத்தில் உக்ரைன் மக்கள்!

  பல சமாதான முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் இரு நாடுகளும் உக்கிரத்துடன் போரிட்டு வருவதால் இழப்பு இருபக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீதான போரைக் கண்டித்து ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாடகர் இவான் விடாலிவெச் பெடுனின் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் 2 நிமிடம் 16 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீங்கள் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்.

  கொலைகளை ரஷ்யா அரசு செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பாவத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த நோக்கத்திற்காகவும் நான் யாரையும் கொல்ல தயாராக இல்லை.

  துப்பாக்கியை வைத்து மற்றவர்களை கொல்வதற்கு எனக்கு உரிமை கிடையாது. என்மீது அன்பு கொண்டவர்களே, என்னை மன்னித்து விடுங்கள். சில சமயம் நீங்கள் கொண்ட கொள்கைக்காக மரணிக்க நேரிடும்’ என்று கூறி  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இன்னும் எவ்வளவு ரத்தம் ஓட வேண்டும்... ரஷ்யா- உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

  அவர் 10-ஆவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவம் ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Russia - Ukraine