முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாமனிதன் படத்துக்கு ரஷ்ய அரசு கொடுத்த அங்கீகாரம்... மகிழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி!

மாமனிதன் படத்துக்கு ரஷ்ய அரசு கொடுத்த அங்கீகாரம்... மகிழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி!

சீனுராமசாமி - விஜய் சேதுபதி

சீனுராமசாமி - விஜய் சேதுபதி

உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் திரையிடுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாஸ்கோ சர்வதேச பட விழாவில் உலக சினிமா பிரிவில் சீனு ராமசாமியின் மாமனிதன் படம் திரையிடப்படுகிறது.  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ் பொழுதுபோக்குப் படமான 'மாமனிதன்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் தொடர்ந்து விருதுகளை வென்று வருகிறது.

இந்தோ பிரெஞ்ச் சர்வதேச திரைப்பட விழா மற்றும் டோக்கியோ திரைப்பட விழாக்களில் விருதுகளைப் வென்றது மாமனிதன் திரைப்படம். அதோடு புனேவில் நடந்த, கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழையும் பெற்றது. இப்படி பல அங்கீகாரங்களைப் பெற்ற இப்படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதனை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பகிர்வதில் மகிழ்ச்சி. ஏப்ரல் 20 முதல் 27 வரை நடக்கும் 45-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில், உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் திரையிடுகிறது. இதையடுத்து MIFF மதிப்புமிக்க திரைப்பட விழாக் குழு, மாமனிதன் திரைப்பட தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் எனக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நடிகர் பார்த்திபனும் ரசிகர்களும் மாமனிதன் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Seenu ramasamy, Yuvan Shankar raja