விஜய்யின் மாஸ் வசனத்தை பேசிய சர்வதேச கிரிக்கெட் வீரர்!

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில், “எப்படி வந்தோம் என்பது முக்கியமல்ல. புல்லட் எப்படி இறங்கியது என்றுதான் முக்கியம்” என்று வில்லன்களிடம் விஜய் பேசும் பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.

விஜய்யின் மாஸ் வசனத்தை பேசிய சர்வதேச கிரிக்கெட் வீரர்!
ரஸ்ஸல் அர்னால்ட் | விஜய்
  • News18
  • Last Updated: February 26, 2019, 2:12 PM IST
  • Share this:
சர்வதேச கிரிக்கெட் வீரர் நடிகர் விஜய் போக்கிரி படத்தில் பேசிய பஞ்ச் டயலாக்கை ட்வீட் செய்து அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட இவருக்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் என்றாலே நடிகர்களின் பஞ்ச் வசனங்களை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதை கருத்தில் கொண்டே ஒவ்வொரு படங்களிலும் பஞ்ச் வசனங்கள் எழுதப்படுகின்றன.

அந்த வகையில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில், “எப்படி வந்தோம் என்பது முக்கியமல்ல. புல்லட் எப்படி இறங்கியது என்றுதான் முக்கியம்” என்று வில்லன்களிடம் விஜய் பேசும் பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த வசனத்தை சர்வதேச கிரிக்கெட் வீரரான ரஸல் அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றவுடன் இந்த ட்வீட்டை அவர் பதிவு செய்திருக்கிறார்.

இலங்கை அணியில் இடது கை பேட்ஸ்மேனாக இருந்த ரஸல் அர்னால்ட் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை தாக்குதல்... என்ன நடந்தது? - வீடியோ

First published: February 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்