முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்ஜே பாலாஜி, ஜி.வி.பிரகாஷ் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டின் விலை இவ்வளவா? வெளியான தகவல்

ஆர்ஜே பாலாஜி, ஜி.வி.பிரகாஷ் அணிந்திருக்கும் டீ ஷர்ட்டின் விலை இவ்வளவா? வெளியான தகவல்

ஆர்ஜே பாலாஜி - ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆர்ஜே பாலாஜி - ஜி.வி.பிரகாஷ் குமார்

கடந்த சில மாதங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் balmain என்ற பிராண்டட் டி ஷர்ட்டை அணிந்து விழாக்களில் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என தொடர்ச்சியாக காமெடி படங்களில் நடித்துவந்த ஆர்ஜே பாலாஜி முதன்முறையாக திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ரன் பேபி ரன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்தப் படத்துக்கு விதவிதமான முறையில் புரமோஷன் செய்துவருகிறார் ஆர்ஜே பாலாஜி. கிட்டத்தட்ட எல்லா யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியளித்துவிட்டார். இந்தப் படம் தொடர்பாக ஆர்ஜே பாலாஜியின் மகன் அவரை பேட்டி எடுக்கும் வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

தனது 'ரன் பேபி ரன்' புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்ஜே பாலாஜி அணிந்திருந்த டி ஷர்ட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. கருப்பு நிற டி ஷர்ட்டான அதில் கடிகார படம் இடம்பெற்றிருந்தது.

வைரலாகும் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் டீ ஷர்ட்

இதே போல சமீபத்தில் நடைபெற்ற தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழாவில் அப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அதே டீ ஷர்ட்டை அணிந்திருந்தார்.

சும்மா விடுவார்களா ரசிகர்கள்? அந்த டீ ஷர்ட்டின் பின்னணியை ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் இந்த டீ ஷர்ட் லூயிஸ் வியூட்டன் (Louis Vuitton) என்ற பிராண்ட் எனவும் இந்த டீ ஷர்ட்டின் விலை ரூ. 1 லட்சம் எனவும் தகவல் பரவிவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் balmain என்ற பிராண்டட் டி ஷர்ட்டை அணிந்து விழாக்களில் கலந்துகொண்டனர். விலை மதிப்பு மிக்கதாக கூறப்படும் இந்த டீ ஷர்ட்டின் போலிக்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்தன. ரசிகர்கள் பெரும்பாலானோர் இந்த டீ ஷர்ட்டை அணியத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Gv praksh kumar, RJ Balaji