நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி.. .காவல்நிலையத்தில் யூடியூப் சேனல் மீது புகார்

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வளைதளத்தில் பரவி வந்தன.

நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி.. .காவல்நிலையத்தில் யூடியூப் சேனல் மீது புகார்
நடிகர் கவுண்டமணி
  • Share this:
நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், கவுண்டமணியின் உடல்நலம் குறித்து பொய்ச் செய்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அவரது வழக்கறிஞர் சசிக்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த வதந்தி காரணமாக நடிகர் கவுண்டமணி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள வழக்கறிஞர் சசிகுமார், புதிய படங்களில் கவுண்டமணி நடித்து வருவதால் இதுபோன்ற செய்திகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புகார் மனுவில் கூறியுள்ளார்.


ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வளைதளத்தில் பரவி வந்தன. அது தொடர்பாக ஏற்கனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் நடிகர் கவுண்டமணி குறித்து பொய்யான செய்தி வீடியோ காக பரவி வருகிறது. அது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள கவுண்டமணி தீயவர்கள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading