வங்கியில் ரூ. 30 கோடி கடன் பெற்று நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்பின்னர், சங்க நிர்வாகிகளான தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்கான ஒப்புதலை பொதுக்குழுவில் பெற்றிருக்கிறோம்.
இன்னும் 40 சதவீத கட்டிடப்பணி முடிவடைய வேண்டி இருக்கிறது. அதற்கு ரூ.30 கோடி தேவையாக இருக்கிறது. வங்கி கடன் பெற்று கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளோம்.
நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து - பிரபல இயக்குனர் பகீர் பதிவு
நடிகர், நடிகைகளிடமுடம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். இன்னும் 3 மாதத்துக்குள் கட்டிட வேலையை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - 'தோனி ஸ்டைலில் வேலை செய்யணும்...' - அஜித் படத்தை இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் பதில்
கட்டிடம் கட்டி முடித்த பிறகு அதில் வரும் வருவாயில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவிகள் வழங்குவோம். நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் அடையாளமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.