கல்கி அறக்கட்டளைக்கு பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவினர் 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கினர். இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து அமரர் கல்கி குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்திருந்தது.
இது குறித்து சமூக வலைதளங்களிலும் சிலர் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்பாளர்களான லைகா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அமரர் கல்கி அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர். அந்த காசோலையை கல்கியின் மகனிடம் நேற்று பொன்னியின் செல்வன் பட குழுவினர் ஒப்படைத்தனர்.
WATCH – வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 234 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ரசிகர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ் கரன், தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகள் இயக்கும் படத்தின் பூஜையில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ponniyin selvan