முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி... ஆஸ்கர் விழா முடிந்து வீடு திரும்பிய ஜூனியர் என்டிஆர் பெருமிதம்!

ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி... ஆஸ்கர் விழா முடிந்து வீடு திரும்பிய ஜூனியர் என்டிஆர் பெருமிதம்!

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

நாட்டு நாட்டு பாடலை பாடகர்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் பாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95-வது அகாடமி விருது விழாவில் கலந்துகொண்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் ஆகியோர் இன்று காலை ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றதால் RRR குழு மகிழ்ச்சியில் இருந்தது. விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் என்டிஆர், தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். RRR மற்றும் வைரலான நாட்டு நாட்டு பாடலை விரும்பி கொண்டாடிய அனைவருக்கும் நடன இயக்குனர் பிரேம் நன்றி தெரிவித்தார்.

நாட்டு நாட்டு பாடலை பாடகர்கள் கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் பாடினர். ஆஸ்கர் விழா மற்றும் பார்ட்டி முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆர் மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தனர். அவர்களைச் சூழ்ந்திருந்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள், ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பேசிய ராம்சரண், "எம்.எம்.கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டது மிகச் சிறந்த தருணம். நான் ஆர்.ஆர்.ஆர் படத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அந்தப் படத்தை கொண்டாடியதற்காக ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் பெற்ற இந்த விருது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அன்பினால் மட்டுமே சாத்தியம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Oscar Awards