ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடவுளை பார்த்து விட்டேன்... ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலி நெகிழ்ச்சி பதிவு!

கடவுளை பார்த்து விட்டேன்... ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலி நெகிழ்ச்சி பதிவு!

ஸ்பீல்பெர்க்குடன் ஆர்.ஆர்.ஆர் குழு

ஸ்பீல்பெர்க்குடன் ஆர்.ஆர்.ஆர் குழு

95வது அகாடமி விருதுகளுக்கான ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் தேர்வு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியும், இசையமைப்பாளர் கீரவாணியும். 

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் பீரியட் படமான ஆர்.ஆர்.ஆர் தற்போது உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஜனவரி 11 ஆம் தேதி ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் போன்றவர்களைத் தோற்கடித்து 'சிறந்த அசல் பாடலுக்கான' கோல்டன் குளோப் விருதைப் பெற்று வரலாறு படைத்தது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல்.

தற்போது திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபல ஹாலிவுட் திரைப்படத் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும் உள்ளார். "நான் கடவுளை சந்தித்தேன்” என தலைப்பிட்டு ஸ்பீல்பெர்க்குடனான படத்தைப் பகிர்ந்துள்ளார் ராஜமெளலி.
 
View this post on Instagram

 

A post shared by SS Rajamouli (@ssrajamouli)மறுபுறம் ஸ்பீல்பெர்க்குடனான படத்தை ட்விட்டரில் பகிர்ந்த கீரவாணி, “திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்து, அவருடைய காதுகளில் டூயல் உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறினேன். மேலும் நாட்டு நாடு பிடிக்கும் என்று அவர் கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் பி.வாசுவுடன் இணையும் ரஜினிகாந்த்?

95வது அகாடமி விருதுகளுக்கான ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் தேர்வு செய்யப்பட்டது. மேலும் படம் ஆஸ்கார் விருதை வென்றால், தானும் ஜூனியர் என்டிஆரும் மேடையில் நடனமாடுவோம் என்று ராம் சரண் கூறியுள்ளார். நாட்டு நாடு என்ற தெலுங்கு பாடலை கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajamouli