Home /News /entertainment /

RRR: நாளை ஆர்ஆர்ஆர் ரிலீஸ்... வரலாறு காணாத டிக்கெட் விலை உயர்வால் கவலையில் ரசிகர்கள்

RRR: நாளை ஆர்ஆர்ஆர் ரிலீஸ்... வரலாறு காணாத டிக்கெட் விலை உயர்வால் கவலையில் ரசிகர்கள்

RRR

RRR

தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், திரையரங்குகளில் படத்தைப் பார்ப்பதற்கான முடிவை மறுபரிசீலனை செய்வதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    பல வாரங்கள் தீவிர ப்ரொமோஷன்களுக்குப் பிறகு, எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான படைப்பான RRR வெள்ளிக்கிழமை, மார்ச் 25-ம் தேதியன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் அலியா பட் நடித்துள்ள இந்தப் படத்தை, பெரிய திரைகளில் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    கடந்த மார்ச் 18-ம் தேதி, தெலுங்கானா அரசின் உள்துறை, RRR படத்துக்கு முதல் 10 நாட்களுக்கு டிக்கெட் விலையை அதிகரிக்க, திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. ஏசி மற்றும் ஏர் கூல்டு திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கு 50 ரூபாயும், அடுத்த வாரத்திற்கு 30 ரூபாயும் டிக்கெட் விலையை உயர்த்தலாம். சாய்வு இருக்கைகளுக்கு, முதல் மூன்று நாட்களுக்கு 100 ரூபாயும், அடுத்த ஒரு வாரத்திற்கு 50 ரூபாயும் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு தெலுங்கானா மாநிலத்தில் முதல் 10 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடவும் திரையரங்குகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதேபோல், ஆந்திர மாநில அரசும் மார்ச் 18-ம் தேதியன்று RRR வெளியான 10 நாட்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட, 75 ரூபாய் டிக்கெட் விலையை அதிகரிக்க திரையரங்குகளுக்கு அனுமதி அளித்தது. அரசாணையின்படி, RRR 'சூப்பர் ஹை பட்ஜெட் படம்' கேட்டகரியின் கீழ் வருவதால், விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

    அரசின் இந்த நடவடிக்கையால், ஹைதராபாத்தில் உள்ள மல்டிபிளக்ஸ்களில் ஆர்ஆர்ஆர் டிக்கெட் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மல்டிபிளக்ஸ் டிக்கெட்டுகள் மார்ச் 25 முதல் 27 வரை முதல் மூன்று நாட்கள் நகரத்தில் ரூ.400-450 விலையில் விற்கப்படுகிறது. சிங்கிள் ஸ்கிரீன்களில், ஆர்ஆர்ஆர் டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.200-230 வரை விற்கப்படுகிறது. ஆகையால் தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், திரையரங்குகளில் படத்தைப் பார்ப்பதற்கான முடிவை மறுபரிசீலனை செய்வதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!

    2021 டிசம்பரில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்களை அரசாங்கம் வெளியிட்ட பிறகு தெலுங்கானாவில் RRR டிக்கெட் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆந்திர அரசும் மார்ச் 8-ம் தேதி புதிய டிக்கெட் விலைகளை அறிவித்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajamouli, Ram Charan

    அடுத்த செய்தி