ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொங்கல் ரிலீஸை புரட்டிப்போட்ட ராஜமௌலியின் முடிவு!

பொங்கல் ரிலீஸை புரட்டிப்போட்ட ராஜமௌலியின் முடிவு!

ராஜமௌலி

ராஜமௌலி

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 2022 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022 ஜனவரி சங்கராந்தியை முன்னிட்டு படத்தை வெளியிட ராஜமௌலி திட்டமிட்டிருப்பது தெலுங்குப் படங்களின் ஜனவரி வெளியீட்டை கடுமையாகப் பாதித்துள்ளது. 

ஜனவரியில் நமக்கு பொங்கல் என்றால் தெலுங்குப் பேசும் மக்களுக்கு சங்கராந்தி. ஜனவரி 14 இல் சங்கராந்தி வருகிறது. அதனை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்தமுறை மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, பவன் கல்யாண், ராணா இணைந்து நடித்துள்ள பீம்ல நாயக், பிரபாஸின் ராதே ஷ்யாம் என பல படங்கள் சங்கராந்தியை குறி வைத்திருந்தன.

இதில் ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்கள் ஜனவரி 14 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை சங்கராந்தியை முன்னிட்டு வெளியிட ராஜமௌலியும் தயாரிப்பாளர்களும் முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இது பிற தயாரிப்பாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராதே ஷ்யாம் பான் இந்தியா திரைப்படம். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. அதே போல் ஆர்ஆர்ஆர் படமும். ராதே ஷ்யாமுக்கு தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

காரணம் நான் மற்றும் பாகுபலி படங்கள். பொங்கலை முன்னிட்டு 13 அல்லது 14 ஆம் தேதி வலிமை தமிழகத்தில் வெளியாகிறது. நிச்சயம் அதேநாளில் தெலுங்கில் வலிமை வெளியாக வாய்ப்பில்லை. திரையரங்குகள் கிடைப்பது கஷ்டம்

இதில் ஒரேயொரு படம் மட்டும் புத்திசாலித்தனத்துடன் தனது வெளியீட்டை சில வாரங்கள் முன்பே வைத்துக் கொண்டது. அது அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியிருக்கும் புஷ்பா. பகத் பாசில் வில்லனாக நடித்திருக்கும் புஷ்பா இரு பாகங்களாக வெளியாகிறது.

முதல் பாகம் டிசம்பர் 17 வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால், ஆர்ஆர்ஆர் ஜனவரியில் வெளியானாலும் அதற்கு பாதிப்பில்லை. ராஜமௌலி படம் வெளியாகும் போது புஷ்பா ஏற்கனவே மூன்று வாரங்களை திரையரங்கில் நிறைவு செய்திருக்கும்.

Also read... விவாதத்தை கிளப்பிய ஆன்ட்ரியாவின் டாட்டூ - புகைப்படங்கள்!

அதேநேரம் சர்க்காரு வாரி பாட்டா, பீம்ல நாயக், ஆச்சார்யா போன்ற படங்கள் வேறு தேதிக்கு தள்ளிப்போகும் சூழல் உருவாகும். அதனால், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் ராஜமௌலி மீதும் ஆர்ஆர்ஆர் படத்தயாரிப்பாளர்கள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆர்ஆர்ஆர் படம் ஜனவரியில் வெளியாகாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சிகள் நடக்கின்றன.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Rajamouli