பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் விஜய்யின் மாஸ்டர் பட வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகியப் படங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ள ராஜமெளலியின் திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் நோக்கில் இப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பல வெளியீட்டு தேதிகளை கடந்து இன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.
RRR: தமிழகத்தில் சாதனைப் படைத்த ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்!
ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த இவர் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீமாக நடித்துள்ளார். இவர் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!
இந்நிலையில் உலகம் முழுக்க இன்று வெளியாகியிருக்கும் ஆர்ஆர்ஆர் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியாவில் 441K டாலர்களை வசூலித்துள்ளது. அதே வேளையில் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 253K தான் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் மாஸ்டர் வசூலை ஆர்ஆர்ஆர் முறியடித்திருப்பது தெரியவந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.