முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஸ்கர் வென்ற RRR பட பாடலின் தொடக்க புள்ளியே தமிழர்தான்.. மகிழ்ச்சியில் விஸ்வநாத் சுந்தர்!

ஆஸ்கர் வென்ற RRR பட பாடலின் தொடக்க புள்ளியே தமிழர்தான்.. மகிழ்ச்சியில் விஸ்வநாத் சுந்தர்!

விஸ்வநாத் சுந்தர்.

விஸ்வநாத் சுந்தர்.

ஆர் ஆர் ஆர் திரைப்பட பாடல் ஆஸ்கர் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது என அப்பாடலுக்கு கான்செப்ட் ஆர்ட் செய்து கொடுத்த விஸ்வநாத் சுந்தர் தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்.ஆர்.ஆர். படத்தின் படத்தின் பாடல் ஆஸ்கார் விருது வென்றது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாக, பாடலுக்கு கான்செப்ட் ஆர்ட் செய்து கொடுத்த தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாத் சுந்தர் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு தெரிவித்துள்ளார்.

மிகப்பிரம்மாண்ட படங்களுக்கு எல்லாம் நேரடியாக ஷூட்டிங் சென்றுவிட மாட்டார்கள். அதெற்கெல்லாம் ஒரு ப்ளான் தயார் செய்யப்படுகிறது. அதில் முக்கியமானது கான்செப்ட் ஆர்ட். ஒரு முக்கியமான சீன் எடுக்கப்படும் முன்பு அது விஷுவலாக எப்படி இருக்கும் என்பதை மாதிரியாக, ஆர்ட்டாக உருவாக்குவார்கள். அப்படி ராஜமெளலி எடுக்கும் காட்சிகளுக்கு கான்செப்ட் ஆர்டிஸ்டாக பணியாற்றியவர் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாத் சுந்தர்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. அதுக்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடையில் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் கான்செப்ட் ஆர்டிஸ்ட் விஸ்வநாத் சுந்தர் இந்த விருதை வென்றது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Concept artist of RRR Nattu Nattu Song Viswanath Sundar shares his happiness over Oscar winning, Naatu Naatu song from RRR, RRR Naatu Naatu oscar award, RRR oscar win, naatu naatu meaning, naatu naatu song writer, naatu naatu singer, naatu naatu choreographer, naatu naatu oscar, naatu naatu' music director, m. m. keeravani naatu naatu, naatu naatu dance, நாட்டு நாட்டு பாடல், நாட்டு நாட்டு ஆஸ்கர், நாட்டு நாட்டு ஆஸ்கர் விருது, நாட்டு நாட்டு பாடல்
ஆர்.ஆர்.ஆர் கான்செப்ட்

மேலும் அந்த படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடலுக்கு பணியாற்றிய அனுபவத்தையும் நியூஸ் 18 தமிழ்நாடு உடன் பகிர்ந்துள்ளார். இவர் பாகுபலி படத்தில் இருந்து எஸ்.எஸ்.ராஜமெளலியிடன் பயணித்து வருகிறார். மேலும் இவர் படத்தில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கான காட்சி அமைப்பு முறையை  கான்செப்ட் ஆர்டில் வரைந்து கொடுப்பதை ராஜமெளலி பிரமாண்டமாக படமாக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Oscar Awards