Home /News /entertainment /

Beast: மதுரை திரையரங்கில் பீஸ்ட் இரண்டாம் பாகத்திற்கு பதில் ஆர்ஆர்ஆர் படம் - கோபமான ரசிகர்கள்!

Beast: மதுரை திரையரங்கில் பீஸ்ட் இரண்டாம் பாகத்திற்கு பதில் ஆர்ஆர்ஆர் படம் - கோபமான ரசிகர்கள்!

பீஸ்ட்

பீஸ்ட்

கோபமான ரசிகர்கள் ஆபரேட்டர் ரூமை நோக்கி டார்ச் அடித்து கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    மதுரையிலுள்ள திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாதிக்கு பதில் ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆபரேட்டர் ரூமை நோக்கி டார்ச் அடித்தனர்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    KGF Chapter 2 Review: முதல் பாகத்தை விட கூடுதல் பிரமாண்டம்... கொண்டாடும் ரசிகர்கள்!

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். ஆனால் படம் தங்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்தவில்லை என விஜய் ரசிகர்களே ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில் மதுரையிலுள்ள ஒரு திரையரங்கில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பதில், எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையிடப்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதனால் கோபமான ரசிகர்கள் ஆபரேட்டர் ரூமை நோக்கி டார்ச் அடித்து கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்

    பின்னர் ஆர் ஆர் ஆர் படத்தை நிறுத்தி விட்டு, விளம்பரங்கள் ஒளிபரப்பட்டது. அதைத் தொடர்ந்து பீஸ்ட் மோடுக்கு சென்றது திரையரங்கு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay, Beast

    அடுத்த செய்தி