இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது. மறுபக்கம் பாகுபலி ஹீரோ பிரபாஸ், சாஹோ என்ற படத்தில் நடிக்க, அந்த திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
Also Read : இயக்குநருக்கு 1.15 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசளித்த தயாரிப்பாளர்
இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, படத்தில் நடித்திருந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புரொமோஷன் பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்துவந்தனர். ஒரு படத்திற்கு புரொமோஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆர்.ஆர்.ஆர். ஓர் உதாரணம் என்று சினிமா இன்டஸ்ட்ரியில் பேசப்பட்டது.
Also Read :
மிஷ்கினின் புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி
ஜனவரி 7-ம்தேதி ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கடந்த டிசம்பர் மாத இறுதியில் அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.
இதன்காரணமாக ஆர்.ஆர்.ஆர்., வலிமை உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மார்ச் 25-ம்தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
ஒவ்வொரு காட்சியையும், ராஜமவுலி சிற்பி போல் செதுக்கியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.