ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட வெளியீடு ஒத்தி வைக்கப்படுகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்பட வெளியீடு ஒத்தி வைக்கப்படுகிறது... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

RRR | நடித்திருந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புரொமோஷன் பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்துவந்தனர்.

RRR | நடித்திருந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புரொமோஷன் பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்துவந்தனர்.

RRR | நடித்திருந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புரொமோஷன் பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்துவந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்தியாவிலேயே மிகப்பெரும் பொருட் செலவுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வந்த ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீடு, ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய சினிமாவின் டாப் இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் இயக்கிய பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு சினிமாவின் புகழ் உலகளவில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கடைசியாக ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி 2 திரைப்படம் 2017-ல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

  இதற்கு பின்னர் ராஜமவுலி என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களிடையே காணப்பட்டது. மறுபக்கம் பாகுபலி ஹீரோ பிரபாஸ், சாஹோ என்ற படத்தில் நடிக்க, அந்த திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

  இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

  இதன்பின்னர், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்கப் போவதாக ராஜமவுலி அறிவிக்க, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகால கடும் உழைப்புக்கு பின்னர் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

  இதையொட்டி, படத்தில் நடித்திருந்த ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு புரொமோஷன் பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்துவந்தனர். ஒரு படத்திற்கு புரொமோஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆர்.ஆர்.ஆர். ஓர் உதாரணம் என்று சினிமா இன்டஸ்ட்ரியில் பேசப்பட்டது.

  இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘என்னதான் நாம் கடும் உழைப்பை மேற்கொண்டாலும் சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இந்தியாவில் பல திரையரங்குகள் மூடப்படுவதை பார்க்க முடிகிறது. உங்கள் எதிர்பார்ப்பை இன்னும் சில காலத்திற்கு தள்ளி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைப்பதை விட, எங்களுக்கு வேறு வழியில்லை. இந்திய சினிமாவின் பெருமையை (ஆர்.ஆர்.ஆர்.) சரியான நேரத்தில் உங்கள் முன் கொண்டு வருவோம்.

  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ்

  Published by:Musthak
  First published:

  Tags: NTR, Rajamouli, Ram Charan