ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விளம்பர செலவாவது கிடைக்குமா? ஜப்பானில் களைகட்டாத ஆர்ஆர்ஆர் திரைப்படம்.. வசூல் மந்தம்!

விளம்பர செலவாவது கிடைக்குமா? ஜப்பானில் களைகட்டாத ஆர்ஆர்ஆர் திரைப்படம்.. வசூல் மந்தம்!

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், ராம்சரண்.

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், ராம்சரண்.

இயக்குனர் ராஜமௌலி ஜப்பான் சென்று பட ப்ரோமோஷன்காக 5 கோடிக்கும் மேலே செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜப்பானில் திரையிடப்பட்ட ஆர்ஆர்ஆர் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.கடந்த வாரம் ஜப்பானில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

  இயக்குனர் ராஜமௌலி ஜப்பான் சென்று பட ப்ரோமோஷன்காக 5 கோடிக்கும் மேலே செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜப்பானில் படம் வெளியாகி 4 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

  ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின்  இந்தி வெர்ஷன் நெட் பிளிக்ஸ் ஓடிடியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட வெர்ஷன் ஜீ 5 ஓடிடி தளத்திலும் வெளியாகின.

  நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாதனை ஒன்றை ஆர்ஆர்ஆர் படைத்துள்ளது. அதாவது ஆங்கிலம் அல்லாத பிறமொழி திரைப்படங்களில் அதிக மணி நேரங்கள் இந்தப் படம் நெட் பிளிக்ஸ் பார்க்கப்பட்டுள்ளது.

  ss rajamouli movies upcoming, s. s. rajamouli net worth, ss rajamouli mahabharata, s. s. rajamouli son, s. s. rajamouli father, ss rajamouli twitter, s. s. rajamouli age, ss rajamouli political views, bahubali director, ss rajamouli hindu dharma, ss rajamouli 4 varna, எஸ் எஸ் ராஜமெளலி, எஸ் எஸ் ராஜமெளலி இந்து தர்மம், எஸ் எஸ் ராஜமெளலி வர்ணாசிரமம், எஸ் எஸ் ராஜமெளலி படங்கள், எஸ் எஸ் ராஜமெளலி பாகுபலி, எஸ் எஸ் ராஜமெளலி ஆர் ஆர் ஆர்

  பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர் போன இயக்குனரான எஸ் எஸ் ராஜமெளலி இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் கேஜிஎஃப் 2 படத்திற்குப் பின் இரண்டாவது இடத்தில் RRR உள்ளது. இப்படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல், நெட்பிளிக்ஸில் வெளியாகி மேற்கு உலக நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

  சுதந்திர போராட்ட களம், நட்பு, காதல், சண்டை காட்சிகள் என தரமான மசாலா திரைப்படமாக இதனை ராஜமவுலி உருவாக்கியிருந்தார்.

  Read More: லைகர் படுதோல்வியால் கோபம்.. இயக்குநரின் போனைக் கூட எடுக்காமல் கடுப்பு காட்டும் விஜய் தேவரகொண்டா!?

  இப்படத்தை பார்த்து வியந்து பல ஹாலிவுட் இயக்குநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் காங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படப்புகழ் அனுராக் காஷ்யெப் அமெரிக்கா போன்ற நாடுகளில் மார்வெல் படங்களை விட RRR படத்தை வியந்து பார்ப்பதாகவும், இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நாமிஷேனுக்காக RRR தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்படம் 99% சதவீதம் ஆஸ்காருக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Junior NTR, Rajamouli, Ram Charan