RRR படத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பாலம் ஸ்டன்ட் காட்சி, எப்படி உருவானது என்கிற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, பாகுபலி 2 படத்திற்கு பின்னர் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார். கடந்த மார்ச் 24ம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 1200 கோடியை வசூலித்துள்ளது.
சுதந்திர போராட்ட களம், நட்பு, காதல், சண்டை காட்சிகள் என தரமான மசாலா திரைப்படமாக இதனை ராஜமவுலி உருவாக்கியிருந்தார்.
இதையும் படிங்க - வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..
படத்தில் இடம்பெற்ற ராம்சரணின் காவல் நிலைய அறிமுக காட்சி, ஜூனியர் என்டிஆர் காட்டில் அறிமுகமாகும் காட்சி, பாலம் ஸ்டன்ட், ராம் சரண் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் ரசிகர்களின் பாராட்டை அதிகம் பெற்றன.
குறிப்பாக பாலம் ஸ்டன்ட் காட்சி, ட்ரெய்லரில் இடம்பெற்ற போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ரசிகர்களை திருப்திபடுத்தியது.
இந்நிலையில் அந்த ஆக்சன் காட்சி விசுவல் கிராபிக்ஸ் உதவியுடன் எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க - சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா
படத்தில் இந்த காட்சிகள் கிராபிக்ஸ் என்று கூற முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. பாகுபலி, பாகுபலி 2 படங்களிலும் விசுவல் கிராபிக்சை ராஜமவுலி சிறப்பாக பயன்படுத்தி, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருப்பார்.
அடுத்ததாக ராஜமவுலி மகேஷ்பாபு படம் ஒன்றை இயக்குகிறார். புதையல் எடுப்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆப்பிரிக்க காடுகளில் ஷூட்டிங் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகேஷ்பாபு இயக்கவுள்ள படத்திற்கும் ராஜமவுலியின் ஆஸ்தான கதாசிரியரான அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதவுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.