ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஓடிடியில் சாதனை படைத்த ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்…

ஓடிடியில் சாதனை படைத்த ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்…

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், ராம்சரண்.

ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், ராம்சரண்.

RRR Movie : இந்தி வெர்ஷன் நெட் பிளிக்ஸ் ஓடிடியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட வெர்ஷன் ஜீ 5 ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, பாகுபலி 2 படத்திற்கு பின்னர் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார். கடந்த மார்ச் 24ம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 1200 கோடியை வசூலித்துள்ளது.

சுதந்திர போராட்ட களம், நட்பு, காதல், சண்டை காட்சிகள் என தரமான கமர்ஷியல் திரைப்படமாக இதனை ராஜமவுலி உருவாக்கியிருந்தார்.

படத்தில் இடம்பெற்ற ராம்சரணின் காவல் நிலைய அறிமுக காட்சி, ஜூனியர் என்டிஆர் காட்டில் அறிமுகமாகும் காட்சி, பாலம் ஸ்டன்ட், ராம் சரண் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் ரசிகர்களின் பாராட்டை அதிகம் பெற்றன.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஓடிடியில் கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. இதன் இந்தி வெர்ஷன் நெட் பிளிக்ஸ் ஓடிடியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட வெர்ஷன் ஜீ 5 ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டன.

also read : த்ரிஷாவின் அப்பாவை இதுவரை பாத்திருக்கீங்களா? வைரல் புகைப்படம்.. 

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாதனை ஒன்றை ஆர்ஆர்ஆர் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆங்கிலம் அல்லாத பிறமொழி திரைப்படங்களில் கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணி நேரங்கள் இந்தப் படம் நெட் பிளிக்ஸ் பார்க்கப்பட்டுள்ளது.

இது எந்தப் படமும் செய்யாத சாதனை என்று தகவல் தெரிவிக்கின்றன. ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க - விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அடுத்ததாக ராஜமவுலி மகேஷ்பாபு படம் ஒன்றை இயக்குகிறார். புதையல் எடுப்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆப்பிரிக்க காடுகளில் ஷூட்டிங் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகேஷ்பாபு இயக்கவுள்ள படத்திற்கும் ராஜமவுலியின் ஆஸ்தான கதாசிரியரான அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதவுள்ளார்.

Published by:Musthak
First published:

Tags: Rajamouli