ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகர் விஜய் பற்றி பேசிய ஜூனியர் என்.டி.ஆர்.. ஷாக்கில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் பற்றி பேசிய ஜூனியர் என்.டி.ஆர்.. ஷாக்கில் ரசிகர்கள்!

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

நடிகர் விஜய் பற்றி ஜூனியர் என்.டி.ஆர் பேசி இருக்கும் சீன்கள் விஜய் டிவி-யின் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் பிரமாண்ட டைரக்டர்களில் ஒருவரான ராஜமௌலியின் இயக்கத்தில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது RRR திரைப்படம். எழுச்சி - Rise, கர்ஜனை - Roar, கிளர்ச்சி -Revolt என்று பொருள்படும் வகையில் RRR என்று தனது திரைப்படத்திற்கு பெயர் சூட்டி இருக்கிறார் டைரக்டர் ராஜமௌலி. ஏற்கனவே RRR-ன் பிரமாண்ட டிரெயிலர் வெளியாகி தென்னிந்திய ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

மஹதீரா, நான் ஈ உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்த ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பான பாகுபலி 1 & 2 ஆகியவை உலக அளவில் வெளியாகி சர்வதேச அளவில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து ராஜமௌலியின் அடுத்த திரைப்படம் பற்றி அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் டைரக்டர் ராஜமௌலி, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் ராம்சரண் ஆகியோரின் கூட்டணி அறிவிக்கப்பட்டு இந்த திரைப்படத்திற்கு RRR என பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணியே இந்த திரைப்படத்திற்கும் இசைய அமைத்துள்ளார். செந்தில்குமாரின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் பிரமாண்டமாக தயாராகி ரிலீஸிற்காக காத்திருக்கிறது RRR திரைப்படம். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு மற்றும் கொமராம்பீம் ஆகியோரது வாழ்க்கையை தழுவி இந்த RRR திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக இருப்பதால் தமிழக ரசிகர்களிடையே படத்தினை ப்ரமோட் செய்யும் வேலை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படத்தின் ப்ரீப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

இதனிடையே நாளை புத்தாண்டு தினத்தையொட்டி தமிழ் சேனல்களில் சிறப்பு ஷோக்கள் ஒளிபரப்பாகி உள்ள நிலையில், RRR-ன் ப்ரமோஷன் ஷோ விஜய் டிவி-யில் நாளை மதியம் 2.30-க்கு டெலிகாஸ்ட் ஆக உள்ளது. பிரபல ஆங்கர் டிடி தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் ராம்சரண் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த ஷோவில் நடிகர் விஜய் பற்றி ஜூனியர் என்.டி.ஆர் பேசி இருக்கும் சீன்கள் விஜய் டிவி-யின் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

தளபதி விஜய் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ”விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் மிகவும் அன்பான மற்றும் பண்பான மனிதர். அவரிடம் நிறைய முறை பேசி இருக்கிறேன். மாஸ்டர் பட ரிலீசுக்கு பிறகு கூட அவரிடம் பேசினேன். அவர் ஒரு அற்புதமான மனிதர், அவற்றை பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது.

இதையும் படிங்க.. வில்லியின் ரீஎன்ட்ரியை பாட்டு போட்டு வரவேற்கும் சீரியல் குழு! பாரதி கண்ணம்மா வெண்பா ரிட்டர்ன்ஸ்

தனக்கு இருக்கும் ஸ்டார் வேல்யூவை எல்லாம் தலைக்கு எடுத்து கொண்டு செல்லாமல், அப்படியே வெளியவே வைத்து விட்டு உள்ளுக்குள் மிகவும் நார்மலாக இருப்பது மிகவும் கடினம். மேலும் அவரது டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும், அதற்கு நான் மிகப்பெரிய ரசிகன். மேலும் அவர் எனக்கு சீனியர் என்பதால் அவரிடம் நான் இன்னும் நிறைய கற்று கொள்ள நினைக்கிறேன்” என்று நடிகர் விஜயை புகழ்ந்து தள்ளி உள்ளார். தளபதி ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி-யின் இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Vijay, Ram Charan, Vijay tv