RRR படத்திற்கு 99% சதவீதம் ஆஸ்கார் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யெப் தெரிவித்துள்ளார். இப்படம் ஹாலிவுட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர் போன இயக்குனரான எஸ் எஸ் ராஜமெளலியின் RRR இந்த ஆண்டுவெளியாகியது. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் கேஜிஎஃப் 2 படத்திற்குப் பின் இரண்டாவது இடத்தில் RRR உள்ளது. இப்படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல், நெட்பிளிக்ஸில் வெளியாகி மேற்கு உலக நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்து வியந்து பல ஹாலிவுட் இயக்குநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் காங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் படப்புகழ் அனுராக் காஷ்யெப் அமெரிக்கா போன்ற நாடுகளில் மார்வெல் படங்களை விட RRR படத்தை வியந்து பார்ப்பதாகவும், இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நாமிஷேனுக்காக RRR தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்படம் 99% சதவீதம் ஆஸ்காருக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நுழைவு படமாக RRR தேர்ந்தெடுக்கப்பட்டால் , இந்தியா முதல் 5 ஆஸ்கார் நாமினேஷன்களில் ஒன்றாக இடம்பெற வாய்ப்புண்டு.” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் எண்டிரியாக காஷ்மீர் பைல்ஸ் இருக்காது என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் கடைசியாக நாமிநேட் ஆனப்படம் அமீர்கானின் லகான் திரைப்படம் மட்டுமே. அதன் பிறகு எந்த இந்திய சினிமாவும் நாமிநேட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director Anurag Kashyap, Rajamouli