ஆர்ஆர்ஆர் பட புகழ் நடிகர் ஜூனியர் என்டிஆர் தனக்கு மார்வெல் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் அதில் அயன் மேன் என்ற கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பாகுபலி, பாகுபலி 2 என்ற பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு ஹீரோக்களான ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்த இந்தப் படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.
ஆஸ்கார் 2023 விருதுக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்படம் கோல்டன் குளோப்ஸ் 2023 விருதுக்காக இரண்டு பரிந்துரைகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஓரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. விருதினை படத்தின் இடையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றார்.
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்பட்ட இந்த விழாவில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் மற்ற குழுவினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஜூனியர் என்டிஆர் மார்வெல் திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாகவும், அதற்காக தான் காத்திருப்பதாகவும் கூறினார். மேலும் மார்வெல் கதாப்பாத்திரங்களில் தனக்கு பிடித்தது அயர்ன் மேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோ படங்களால் புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். மார்வெலில் ஸ்பைடர்மேன், தோர், ஹல்க் என பல சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அதில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் அயர்ன்மேன்.
புகழ்பெற்ற அயர்ன்மேன் கதாப்பாத்திரத்தில் ராபர்ட் டோனி ஜூனியர் நடித்திருந்தார். கடந்த 2019ல் வெளியான அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் தானோஸை அழிப்பதற்காகவும், உலகத்தை காப்பாற்றுவதற்காகவும் அயர்ன்மேன் இறப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அயர்ன் மேனின் இழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
அயன் மேன் குறித்து என்டிஆர் கூறுகையில், “அவர் மிகவும் தொடர்புபடித்தக்கொள்ள கூடியவர். அவர் நம்மைப் போன்ற சாதாரன ஒருவர். அவருக்கு சூப்பர் பவர் இல்லை. அவர் வேறு கிரகத்தில் இருந்து வரவில்லை. அவர் ஹல்க் போன்று அறிவியல் பரிசோதனையில் ஈடுபட்டு பவர் கிடைத்தவர் அல்ல" என்று என்டிஆர் தெரிவித்துள்ளார்.
Also read... இரவின் நிழல் முதல் காந்தாரா வரை... ஆஸ்கர் 2023 பட்டியலில் இடம் பிடித்த 10 இந்தியப் படங்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Junior NTR