Home /News /entertainment /

RRR Collection: வெளியீட்டிற்கு முன்பே 500 கோடி வசூலித்த ஆர்ஆர்ஆர்!

RRR Collection: வெளியீட்டிற்கு முன்பே 500 கோடி வசூலித்த ஆர்ஆர்ஆர்!

ஆர் ஆர் ஆர்

ஆர் ஆர் ஆர்

இதன் தெலுங்குப் பதிப்பே தற்போதுள்ள அனைத்து சாதனைகளையும் விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே 500 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

    மார்ச் 25-ஆம் தேதி, அதாவது நாளை பிரமாண்டமாக வெளியாகிறது எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் வெளியீட்டிற்கு முந்தைய வணிகத்தில் ரூ.500 கோடிகளை வசூலித்துள்ளது. மேலும் இது நாடு முழுவதும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் மேற்கண்ட விலைக்கு அதன் உரிமையை விற்கவில்லை.

    இந்த திரைப்படம் அதன் அனைத்து திரையரங்கு பதிப்புகளிலும் உலகெங்கிலும் நல்ல தொகையைப் பெற்றிருக்கிறது. இதன் தெலுங்குப் பதிப்பே தற்போதுள்ள அனைத்து சாதனைகளையும் விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆர் ஆர் ஆர் படத்தின் திரையரங்கு உரிமைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொகை கோடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

    நிஜாம் பகுதி - 72

    சீடெட் - 46

    UA - 27

    குண்டூர் - 19

    கிழக்கு கோதாவரி - 18

    மேற்கு கோதாவரி - 14

    கிருஷ்ணா - 14.5

    நெல்லூர் – 9.5

    தெலுங்கில் மொத்தம் = 220

    Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!

    'ஆர்ஆர்ஆர்' தயாரிப்பாளர்கள் கர்நாடகாவில் ரூ.50 கோடிக்கும், தமிழகத்தில் ரூ.45 கோடிக்கும், கேரளாவில் ரூ.10 கோடிக்கும், ஹிந்தி திரையரங்கு உரிமை ரூ.100 கோடிக்கும், அனைத்து பதிப்புகளின் வெளிநாட்டு உரிமையை ரூ.70+ கோடிக்கும் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், படத்தின் அனைத்துப் பதிப்புகளின் திரையரங்கு உரிமைகள் 500 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajamouli, Ram Charan

    அடுத்த செய்தி