ஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டின் சீதா கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்

ஆர்ஆர்ஆர் : ஆலியா பட்டின் சீதா கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்

ஆலியா பட்

ஆலியா பட்டின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்தில் அவர் ஏற்று நடிக்கும் சீதா கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், ஜூனியர் என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார்.

டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.



அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ஆலியா பட்டின் சீதா கதாபாத்திர போஸ்டரை இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: