ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கர் பரிந்துரையில் RRR படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல்.. துள்ளிக்குதிக்கும் ஹாலிவுட் நடிகை!

ஆஸ்கர் பரிந்துரையில் RRR படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல்.. துள்ளிக்குதிக்கும் ஹாலிவுட் நடிகை!

ஆர்ஆர்ஆர் - ஒலிவியா

ஆர்ஆர்ஆர் - ஒலிவியா

RRR திரைப்படம் OTT தளங்களில் வெளியான பின்னர், மேற்கு நாடுகளில் பெரும் வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

RRR படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் கோல்டன் குளோப் உள்ளிட்ட பெரிய விருதுகளை தொடர்ந்து வென்றாலும், ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸின் வெளிப்படையான உற்சாகத்தால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

RRR படத்தில் ஜூனியர் என்டிஆரின் 'லவ் இண்ட்ரெஸ்ட்டாக' நடித்திருந்தார் ஒலிவியா. சமூக வலைதளங்களில் அவர் படத்தின் சாதனையைப் பற்றி பேசவில்லை என்பதை உணர்ந்த ரசிகர்கள், RRR படம் குறித்து பேசும்படி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படக் குழுவினரை இன்ஸ்டகிராமில் வாழ்த்தினார் ஒலிவியா.

பாடலின் ஒரு ஸ்டில் ஒன்றைப் பகிர்ந்து கொண்ட பிரிட்டிஷ் நடிகை, "RRR-ல் வேலை செய்ததில் நாட்டு நாட்டு பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நாட்டு நாட்டு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, கோல்டன் குளோப்ஸ் விருதை வென்றது மிகவும் பெரிய மற்றும் அற்புதமான விஷயம். இந்த காவியப் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தீட்டு, இவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!




 




View this post on Instagram





 

A post shared by Olivia (@oliviakmorris)



RRR திரைப்படம் OTT தளங்களில் வெளியான பின்னர், மேற்கு நாடுகளில் பெரும் வெற்றி பெற்றது. சிறந்த சர்வதேச பட பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக RRR தேர்வு செய்யப்படாதது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமான பான் நளினின் செலோ ஷோ, முதல் ஐந்து இடங்களுக்குள் வராததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Junior NTR, Rajamouli, Ram Charan