முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யூடியூபில் சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல் முடக்கம்… தனுஷ், யுவன் ரசிகர்கள் அதிர்ச்சி…

யூடியூபில் சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல் முடக்கம்… தனுஷ், யுவன் ரசிகர்கள் அதிர்ச்சி…

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 120 கோடி பார்வைகளை கடந்திருந்தது.

ரவுடி பேபி பாடல் யூடியூபில் 120 கோடி பார்வைகளை கடந்திருந்தது.

மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இந்த ஆல்பமும் ரசிகர்களை கவர்ந்தது.

  • Last Updated :

யூடியூபில் சாதனை படைத்த மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் மற்றும் பாடல் வெளியான தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் யுவனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முடக்கப்பட்ட ரவுடிபேபி பாடல் மற்றும் தனுஷின் உண்டர்பார் யூடியூப் சேனல் மீண்டும் பார்வைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் 2018-ல் மாரி 2 திரைப்படம் வெளியானது. இதன் முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆனதால் இரண்டாம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க - தெலுங்கு பக்கம் கரை ஒதுங்கிய பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ! என்ன காரணம்?

மாரி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், இந்த ஆல்பமும் ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரவுடி பேபி பாடல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களின் விருப்பத்தைப் பெற்றது.

தென்னிந்திய அளவில் எந்த பாடலும் செய்யாத அளவுக்கு சுமார் 120 கோடி பார்வைகளை ரவுடி பேபி பெற்றிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுத, அவரும் தீ-யும் சேர்ந்து பாடியிருந்தனர். பிரபுதேவா இந்த பாடலுக்கு நடன காட்சிகளை அமைத்திருந்தார்.

இதையும் படிங்க - Manju Warrier: தமிழில் பாடகியாக அறிமுகமான மஞ்சு வாரியர்!

துள்ளல் இசை, எளிதாக ஈர்க்கும் பாடல் வரிகள், பாடலுக்கு ஏற்ற குரல்கள், நடன அசைவு, அரங்கத்தின் அமைப்பு உள்ளிட்ட காரணங்களால், ரவுடி பேபி பாடலுக்கு லைக்சும் ஷேரும் குவிந்தன.

இந்நிலையில் ரவுடி பேபி பாடல் உள்பட தனுஷின் உண்டர்பார் ஸ்டூடியோஸ் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் யுவனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

top videos

    யூடியூபில் சாதனை படைத்த தென்னிந்திய சினிமா பாடல் முடக்கப்பட்டிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Actor dhanush, Actress sai pallavi, Yuvan Shankar raja