தனுஷ் - சாய் பல்லவிக்கு டான்ஸ் சொல்லித்தந்த பிரபு தேவா: ரவுடி பேபி மேக்கிங் வீடியோ

இணையத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலில் 4-ம் இடம்பிடித்து புதிய சாதனை படைத்தது.

news18
Updated: March 2, 2019, 5:18 PM IST
தனுஷ் - சாய் பல்லவிக்கு டான்ஸ் சொல்லித்தந்த பிரபு தேவா: ரவுடி பேபி மேக்கிங் வீடியோ
ரவுடி பேபி
news18
Updated: March 2, 2019, 5:18 PM IST
ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான படம் மாரி 2. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வைரல் ஹிட் ஆனது. தனுஷ் எழுதி பாடியிருந்த இந்தப் பாடலுக்கு நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.


இணையத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலில் 4-ம் இடம்பிடித்து புதிய சாதனை படைத்தது. தற்போது வரை 262 மில்லியன் அதாவது 26 கோடி பார்வைகளைப் பெற்றுள்ள இந்தப் பாடல் இதுவரை தமிழ்ப் பாடல்களில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.முன்னதாக தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான கொலவெறி பாடலும், சாய் பல்லவி நடித்த தெலுங்கு படமாக ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முதல்முறையாக அதிக பார்வைகளைப் பெற்றிருந்தன.

Loading...

இந்தநிலையில் ரவுடி பேபி பாடலின் மேக்கின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், தனுஷ் மற்றும் சாய் பல்லவிக்கு பிரபுதேவா நடனம் சொல்லித்தரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மேக்கிங் வீடியோவும் புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.தென்சென்னையில் உதயநிதி போட்டியிட திமுக நிர்வாகி விருப்ப மனு - வீடியோ

First published: March 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...