சூர்யாவுடன் இணைந்த ரவுடி பேபி புகழ் ‘தீ’...!

சூர்யாவின் 39-வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்

news18
Updated: April 24, 2019, 8:58 AM IST
சூர்யாவுடன் இணைந்த ரவுடி பேபி புகழ் ‘தீ’...!
நடிகர் சூர்யா
news18
Updated: April 24, 2019, 8:58 AM IST
சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தில் ஒரு பாடலை ரவுடி பேபி புகழ் தீ பாடியுள்ளார்.

சூர்யா நடிப்பில் வரிசையாக படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்க இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலை பாடிய தீ இந்தப்படத்தில் ஒருபாடலை பாடியுள்ளார்.

இதை ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

அந்த பதிவில், 'ரவுடி பேபி, சண்டக்காரா பாடல்களை பாடிய தீ , சூரரைப் போற்று படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். கலக்கலான பாட்டு விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார்மேலும் இந்தப்படத்தை முடித்த பிறகு சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுAlso watch

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...