மும்பை போலீஸ் திரைப்படத்தை ரீமேக் செய்யும் ரோஷன் ஆண்ட்ரூஸ்!

மும்பை போலீஸ் திரைப்படத்தை ரீமேக் செய்யும் ரோஷன் ஆண்ட்ரூஸ்!

மும்பை போலீஸ் படம்

மலையாளத்தில் வெள்ளி விழா கொண்டாடிய படம், தமிழில் ஃபிளாப்பானது.

 • Share this:
  36 வயதினிலே இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூ தனது மும்பை போலீஸ் படத்தை விரைவில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

  ரோஷன் ஆன்ட்ரூ மலையாளப்பட இயக்குனர். மஞ்சு வாரியரை வைத்து இயக்கிய ஹவ் ஓல்ட் ஆர் யூ? படத்தை 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகாவை வைத்து இயக்கினார். தமிழ் ரசிகர்களுக்கு ரோஷன் ஆன்ட்ரூ குறித்து அதிகம் தெரிந்த ஒரே விஷயம் இது. ஆனால், அவர் அதற்கும் மேலே.

  ரோஷன் ஆன்ட்ரூவின் முதல் படம் உதயனானு தாரம். சீனிவாசன் திரைக்கதையில் மோகன்லால் நடித்த இந்தப் படமே தமிழில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெள்ளித்திரை என்ற பெயரில் ரீமேக்கானது.

  மலையாளத்தில் வெள்ளி விழா கொண்டாடிய படம், தமிழில் ஃபிளாப்பானது. அதன் பிறகு ஒன்பது படங்கள் ரோஷன் ஆன்ட்ரூ இயக்கினார். பெரும்பாலும் பாபி - சஞ்சய் திரைக்கதை. மும்பை போலீசுக்கும் அவர்களே திரைக்கதை எழுதியிருந்தனர். 2013-ல் வெளியான அப்படம் வெற்றி பெற்றது.

  பிருத்விராஜ், ஜெயசூர்யா, ரகுமான் நடித்திருந்த அப்படத்தை ரீமேக் செய்யும்படி பலர் முன்பே கேட்டதாகவும், விரைவில் அப்படத்தை ரீமேக் செய்யவிருப்பதாகவும் ரோஷன் ஆண்ட்ரூ, மும்பை போலீஸ் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் அறிவித்துள்ளார். அனேகமாக அந்த ரீமேக் தமிழில் இருக்கலாம்.

  மும்பை போலீஸ் அட்டகாசமான இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர். எதிர்பாராத கிளைமாக்ஸ் டிவிஸ்டை கொண்டது. தமிழில் ரீமேக்கானால் வெற்றி உறுதி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: