முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எல்லை மீறி போறீங்க... ரோலெக்ஸ் மற்றும் லியோ-விற்கு ஃப்ளேம்ஸ் போட்டுப்பார்த்த ரசிகர்கள் - என்ன வந்துருக்கு தெரியுமா?

எல்லை மீறி போறீங்க... ரோலெக்ஸ் மற்றும் லியோ-விற்கு ஃப்ளேம்ஸ் போட்டுப்பார்த்த ரசிகர்கள் - என்ன வந்துருக்கு தெரியுமா?

லியோ மற்றும் ரோலெக்ஸ்

லியோ மற்றும் ரோலெக்ஸ்

விஜய்யின் நடிப்பில் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் ரோலக்ஸ் மற்றும் லியோ இருவருக்கும் இருவருக்கும் ஃப்ளேம்ஸ் போட்டுப்பார்த்து வருகின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வாரிசு. இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஜெயசுதா, ஷாம், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், குஷ்பு, எஸ்.ஜே.சூர்யா போன்ற பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

விஜயின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் படம் குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்துவதாக பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கொட்டும் பனியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபலங்கள், அவ்வப்போது காஷ்மீரில் இருந்தப்படி போட்டோக்களை வெளியிடும் சோஷியல் மீடியாவை கலக்கி வருகின்றனர்.

'லியோ' படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விக்ரம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. லியோ' படம் முழுமுழுக்க தன்னுடைய பாணியில் இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளதால், இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் LCU படமாக இருந்தால் அதில் நிச்சயம் விக்ரம் மற்றும் ரோலக்ஸ் ஆகியோரும் லியோ படத்தில் வர வாய்ப்பிருக்கிறது.

LCU பற்றிய குழப்பம் ஒருபக்கம் இருக்க, தற்போது ரசிகர்கள் சிலர் லியோ மற்றும் ரோலெக்ஸ் ஆகிய பெயர்களுக்கு ஃப்ளேம்ஸ் போட்டு பார்த்திருக்கிறார்கள். அதில் எனிமி என வந்திருப்பதை போட்டோவாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Also read... நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Actor Vijay