அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
தரமணி வசந்த்ரவி நாயகனாக நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கிய முதல் படம் ராக்கி. பாரதிராஜா இதில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். படம் தயாராகி பல வருடங்களான நிலையில், படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் வாங்கியது. படத்தின் ரத்தம் தெறிக்கும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே படம் குறித்த ஆர்வத்தையும் கிளப்பியது.
எனினும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தனது இரண்டாவது படமான சாணிக்காயிதத்தை முடித்தார் அருண் மாதேஸ்வரன். அப்போதும் ராக்கி வெளியாகவில்லை. இறுதியில் சென்ற வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி ரவுடி பிக்சர்ஸ் படத்தை வெளியிட்டது. முக்கியமான மல்டிபிளக்ஸ்களுக்கு மட்டுமே படத்தை தந்தனர். தனி திரையரங்குகளில் அனேகமாக எதிலும் படம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க.. ரஜினியின் பேட்ட பட விவகாரம் : தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி மீது இரு பிரிவுகளில் வழக்கு!
குறைவான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு இரண்டே வாரத்தில் ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும் என்பதே விக்னேஷ் சிவன், நயன்தாராவின் திட்டமாக இருந்தது. படத்துக்கு கிடைத்த நேர்மறை
விமர்சனங்களை வைத்து லம்பாக ஒரு தொகையை ஓடிடி தளத்திலிருந்து பெறலாம் என்பது அவர்களது கணக்கு. பொங்கலுக்கு ராக்கி ஓடிடியில் வெளியாகும். அதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக படத்தின் பரீமியர் காட்சியின் போது விக்னேஷ் சிவன் கூறினார்.
இதையும் படிங்க.. ’ஆல வைகுந்தபுரமுலு’ இந்தி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய கோல்ட் மைன்ஸ்!
ஆனால், அவர்களின் கணக்கு இன்றுவரை ஈடேறவில்லை. நயன்தாரா நடிப்பில் இதே
ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட நெற்றிக்கண் படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் பெரும் தொகை கொடுத்து வாங்கியது. ஆனால், படம் சுமாராக இருந்ததால் வரவேற்பு பெறவில்லை. இந்த முன் அனுபவம் காரணமாக விக்னேஷ் சிவன், நயன்தாரா சொல்லும் தொகைக்கு ராக்கியை வாங்க ஓடிடி தளங்கள் தயக்கம் காட்டுகின்றன. இதன் காரணமாக பொங்கல் தாண்டியும் ராக்கி இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.