ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படம்!

இந்தியில் ரீமேக்காகும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படம்!

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்தி ரீமேக் மூலம் பணம் கிடைத்துள்ளது.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்தி ரீமேக் மூலம் பணம் கிடைத்துள்ளது.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்தி ரீமேக் மூலம் பணம் கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்ட ராக்கி படத்தின் இந்தி ரீமேக் உரிமை வாங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்திவரும் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நெற்றிக்கண் போன்ற படங்களை தயாரித்தது. தற்போது ஊர்க்குருவி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இவர்கள் பல வருடங்களுக்கு முன் ராக்கி படத்தின் ஒட்டு மொத்த உரிமையை வாங்கினர். தரமணி வசந்த் ரவி நாயகனாக ராக்கியில் நடித்திருந்தார். பாரதிராஜாவும் படத்தில் உண்டு. வன்முறையில் முக்குளித்திருந்த ராக்கியை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார்.

சிம்புவை பற்றி சின்னத்திரை பிரபலத்தின் ஷாக்கிங் ஸ்டேட்மெண்ட்!

பல வருடங்கள் படத்தை பெட்டிக்குள் வைத்து, சென்ற வருட இறுதியில் படத்தை வெளியிட்டனர். மல்டிபிளக்ஸ்களில் மட்டும் படம் வெளியானது. விமர்சனரீதியாக படத்தை பலரும் பாராட்டினாலும், வசூல்ரீதியாக படம் திருப்தி அளிக்கவில்லை. படத்தை ஓடிடியில் வெளியிட விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

ராக்கியை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அப்படம் வெளியாகும் முன்பே செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காயிதம் என்ற படத்தை எடுத்திருந்தார். அப்படம் விரைவில் நேரடியாக ஓடிடில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ராக்கி போலவே சாணிக்காயிதமும் ரத்தம் தெறிக்க தெறிக்க எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் படமும் அப்படியே இருக்கும் என்கின்றன தகவல்கள்.

குக் வித் கோமாளிகளுடன் போட்டி போட ரக்‌ஷன் செய்த காரியம்.. செம்ம வைரல் போங்க!

ராக்கி படத்தின் ஓடிடி உரிமை மூலம் வருமானத்தை எதிர்பார்த்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்தி ரீமேக் மூலம் பணம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை WAKAOO ஃபிலிம்ஸ்  வாங்கியுள்ளது. விரைவில் ராக்கி ஓடிடியில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.நயன்தாரா, விக்னேஷ் சிவன் இதேபோல் வாங்கிய இன்னொரு திரைப்படம் கூழாங்கல். சர்வதேச அளவில் இப்படம் பல விருதுகள் பெற்றது. ஆஸ்கார் போட்டியிலும் கூழாங்கல் கலந்து கொண்டது. ஆனாலும் இன்று வரை அதனை திரையரங்கில் வெளியிடாமல் வைத்துள்ளனர். கூழாங்கல்லுக்கு ரவுடி பிக்சர்ஸ் எப்போது விடுதலை அளிக்கும் என தெரியவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sreeja
First published:

Tags: Director vignesh shivan, Kollywood, Nayanthara