சூர்யா-இயக்குநர் சிவா படம் குறித்த மாஸ் அப்டேட்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் சிவாவின் பிறந்தநாள் இன்று

news18
Updated: August 12, 2019, 10:18 AM IST
சூர்யா-இயக்குநர் சிவா படம் குறித்த மாஸ் அப்டேட்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யா 39
news18
Updated: August 12, 2019, 10:18 AM IST
சூர்யா-இயக்குநர் சிவா படம் குறித்த அப்டேட் இன்று மாலை 5.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா தற்போது இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் இயக்குநர் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், சூர்யாவின் 39-வது படமான இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்த செய்தி சில தினங்களுக்கு முன் வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இயக்குநர் சிவாவின் பிறந்தநாள் இன்று. அவருக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சூர்யா 39 குறித்த அப்டேட்டை இன்று மாலை 5.40 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.



இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Also watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...