Home /News /entertainment /

மாதவனின் ராக்கெட்ரி படத்துடைய சென்சார் சான்றிதழ் வெளியீடு!!

மாதவனின் ராக்கெட்ரி படத்துடைய சென்சார் சான்றிதழ் வெளியீடு!!

நடிகர் மாதவன்

நடிகர் மாதவன்

Rocketry Movie : ராக்கெட்ரி திரைப்படம் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உலக சினிமா பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    மாதவன் ஹீரோவாக நடித்து , இயக்கியுள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்துடைய சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’படத்தை  ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  இந்த படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

    இப்படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இதையும் படிங்க - 'தாய் கிழவி' தனுஷ் - அனிருத் கூட்டணியில் 7 வருடங்களுக்கு பின் உருவான பாடல் வெளியீடு 

    இப்படம் தற்போது சென்சார் போர்டு தணிக்கை நடடிக்கைகளை முடித்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. ஆறு மொழிகளில் மொத்தம் 157 நிமிடங்கள் ஓடும் இப்படம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் ஓடும் என தணிக்கை சான்றிதழில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.



    நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானி கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். அவர் மீது மோசடி குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டு, தேச துரோகி பட்டம் கட்டப்படுகிறது. இதிலிருந்து மீண்டு, தான் ஒரு துரோகி அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில் தன் வாழ்நாளை நம்பி நாராயணன் செலவழித்துள்ளார். இந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க - ஜூலை 8-ஆம் தேதி வெளியாகிறது யோகி பாபுவின் ‘பன்னி குட்டி' படம்! 

    ராக்கெட்ரி படத்தில் மாதவன், ரவி ராகவேந்திரா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெறுகிறார்கள்.  படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    ராக்கெட்ரி திரைப்படம் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, உலக சினிமா பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Madhavan

    அடுத்த செய்தி