நம்பி நாராயணன் கெட்டப்பில் இருந்த தன்னுடன் தனது மனைவி எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் படத்தை பகிர்ந்த மாதவன், ஒரு சுவாரஸ்ய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இந்தப் படம் வரும் ஜூலை 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இது இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். இதில் சிறப்புத் தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், சூர்யாவும் நடித்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் திரையிடப்பட்டது. இதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி பி.எம்.நாயர், மூத்த அதிகாரிகள் மற்றும் ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
80 வயதான விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மாதவன் திரையில் எப்படி காட்டியிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது நம்பி கெட்டப்பில் இருக்கும் தன்னுடன் தனது மனைவி ரொமாண்டிக்காக இருக்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த மாதவன், இதை நான் என் மச்சானுக்கு (மனைவியின் சகோதரர்) அனுப்பிய போது அவர் கோபமடைந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். வயதான தோற்றத்தில் இருப்பது மாதவன் என்று தெரியாமல் தான், அவரது மச்சான் கோபமடைந்ததாக தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.