மகளுடன் ’மாஸ்டர்’ பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் செய்த ரோபோ ஷங்கர்...!

மகளுடன் ’மாஸ்டர்’ பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் செய்த ரோபோ ஷங்கர்...!
ரோபோ சங்கர் | விஜய்
  • Share this:
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வீட்டில் ரோபா சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜா மாஸ்டர் பட பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 14-ம் தேதி வரை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளது.

வீட்டுக்குள்ளேயே பல நாட்கள் இருப்பதால் மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விலகியிருப்பது, இந்தநாட்களை பயனுள்ள நாட்களாக மாற்றிக் கொள்வது எப்படி என்று ஊடகங்கள் மனோதத்துவ நிபுணர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தி அறிவுரை வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில் சமூகவலைதளங்களின் பக்கம் தங்களது கவனத்தை திசை திருப்பி ஒரு சிலர் ஆறுதல் அடைந்து வரும் நிலையையும் காண முடிகிறது. அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது மகளுடன் நடனமாடி டிக் டாக் செய்துள்ளார் நடிகை ரோபோ சங்கர்.ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அவனை விளக்குமாற்றால் அடித்து விரட்டுங்கள் மோடி அய்யா - சூரி வீடியோ
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading