மீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்!

இதில் ப்ளாக் விடோ எவ்வாறு ‘ஷீல்ட்’ உடன் இணைகிறார் என்பது குறித்த விளக்கங்கள் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: September 17, 2019, 3:16 PM IST
மீண்டும் வருகிறார் அயர்ன் மேன்... அடுத்த வெளியீடு குறித்து மார்வெல் அப்டேட்!
அயர்ன் மேன் - ப்ளாக் விடோ
Web Desk | news18
Updated: September 17, 2019, 3:16 PM IST
மார்வெல் கதாபாத்திரங்களில் உலகின் அத்தனை ரசிகர்களையும் கவர்ந்த ஒரே கதாபாத்திரமாக அயர்ன் மேன் இருந்து வருகிறார்.

மார்வெல் கதாநாயகர்கள், நாயகிகளில் பலருக்கும் தனித்தனி விருப்ப நாயக நாயகிகள் இருந்தாலும் அத்தனைப் பேரும் பொதுவான விருப்பமாக இருப்பவர் அயர்ன் மேன் என்னும் ராபர்ட் டவுனி ஜூனியர்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்துடன் அயர்ன் மேன் கதாபாத்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக ரசிகர்கள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தும் வகையில் அடுத்த மார்வெல் திரைப்படத்தில் அயர்ன் மேன் திரையில் தோன்ற உள்ளார்.


மார்வெல் ஸ்டூடியோஸ் சார்பில் அடுத்ததாக ‘ப்ளாக் விடோ’ திரைப்படம் வெளியாக உள்ளது. ப்ளாக் விடோ கதாபாத்திரமும் எண்ட்கேம் உடன் நிறைவு பெற்றதாகக் காட்டப்பட்டது. ஆனால், ஒரு ப்ரீக்வெல் திரைப்படமாக ‘ப்ளாக் விடோ’ இருக்கும். இதில் அயர்ன் மேன் ஆக மீண்டும் ராபர்ட் டவுனி ஜூனியர் திரையில் தோன்ற உள்ளார். இத்திரைப்படம் வருகிர 2020-ம் ஆண்டு மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இதில் ப்ளாக் விடோ எவ்வாறு ‘ஷீல்ட்’ உடன் இணைகிறார் என்பது குறித்த விளக்கங்கள் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: வசூல் சாதனை செய்தாலும் கதையில் ஈர்ப்பில்லை... ’ட்ரீம் கேர்ள்’ திரை விமர்சனம்

Loading...

தொடரும் அஜித்தின் மகள் செண்டிமெண்ட்!
First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...