Home /News /entertainment /

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் சின்னக் கவுண்டர் இரண்டாம் பாகம்...?

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் சின்னக் கவுண்டர் இரண்டாம் பாகம்...?

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்தத் திரைப்படம் வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவை நினைவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
1992 இல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான படம் சின்னக் கவுண்டர். விஜயகாந்த், சுகன்யா, மனோரமா கவுண்டமணி நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தன. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை உதயகுமார் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆர்கே சுரேஷ் நாயகனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

சின்னக் கவுண்டர், குங்கும பொட்டு கவுண்டர் என சாதி பெயரில் படங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அது குறித்து விழிப்புணர்வு தமிழகத்தில் பெரிய அளவில் இருக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், படத்தை தயாரித்தவர்களுக்கும், இயக்கியவர்களுக்கும் அதில் நடித்தவர்களுக்கும் சாதி சார்ந்த அரசியல் பின்னணி வெளிப்படையாக தெரியாததேயாகும்.ஆனால் இப்பொழுது அப்படி அல்ல. அரசியல் பின்னணி உடனே சாதியை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
ஒரு பக்கம் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்குரிய கருவியாக சினிமாவை பயன்படுத்துகையில், சாதியை வைத்து மேலாண்மை செய்தவர்களும் தங்கள் சாதி பெருமையை நிலைநிறுத்த படங்கள் எடுக்கின்றனர் இதற்கு துவக்கமாக திரௌபதி திரைப்படம் அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ஆர்கே சுரேஷ் காடுவெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.




இந்தத் திரைப்படம் வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவை நினைவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகம் என்பவர் படத்தை இயக்கி வருகிறார். இந்த சாதிய படத்தில் நடித்து வரும் ஆர்கே சுரேஷ் தான் சின்னக் கவுண்டர் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பணிகளை சினிமாவில் செய்து வரும் ஆர்கே சுரேஷ் தற்போது பாஜகவில் உள்ளார். அவர் பாஜகவில் இணைந்த பிறகு அவருக்கு தணிக்கைக் குழுவிலும் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி