ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக் கூடாது..' நடிகை இந்துஜாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்கே சுரேஷ்

'ஏற்றிவிட்ட ஏணியை மறக்கக் கூடாது..' நடிகை இந்துஜாவுக்கு பதிலடி கொடுத்த ஆர்கே சுரேஷ்

ஆர்.கே. சுரேஷ் - இந்துஜா

ஆர்.கே. சுரேஷ் - இந்துஜா

இந்துஜா சமீபத்தில் வெளியான தனுஷின் நானே வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தான் தயாரித்து ஹீரோவாக நடித்த படத்தை கிண்டல் செய்த, நடிகை இந்துஜாவுக்கு ஆர்.கே. சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேச்சு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் தன்மையுடன் கோலிவுட்டில் இயங்கி வருபவர் ஆர்.கே. சுரேஷ். இவர் ஸ்டுடியோ 9 என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் பில்லா பாண்டி என்ற திரைப்படம் கடந்த 2018 - இல் வெளியானது.

  இந்த படத்தில் சாந்தினி, இந்துஜா ரவிச்சந்திரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை இந்துஜா, தான் நடித்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் பில்லா பாண்டி என்று கூறியிருந்தார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

  இந்த தலைவர் பதவியே வேண்டாங்க எனக்கு... பிக்பாஸில் ஜிபி முத்துவை புலம்பவிட்ட போட்டியாளர்கள் - கலகல ப்ரோமோ

  இந்துஜா சமீபத்தில் வெளியான தனுஷின் நானே வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றிருந்தார். இந்நிலையில், இந்துஜாவின் பேச்சு குறித்து ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், ஆர்.கே. சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

  இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘தான் நடித்த படங்களிலேயே மோசமான படம் என்று இந்துஜா பில்லாபாண்டியை கூறியிருக்கிறார். இந்தப் படம்தான் அவருடைய முதல் படம். பில்லா பாண்டியில் கதைக்களம் நன்றாக இருக்கும்.

  உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறப்பொண்ணு... ஹேப்பி பர்த்டே கீர்த்தி சுரேஷ்!

  நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ, அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஏற்றிய ஏணியை எந்நாளும் மறக்கக்கூடாது. சினிமா என்பது ஒரு பெரிய வட்டம். ராட்டினம் போல் சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்.கே. சுரேஷ் பேசினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood