சினிமா படப்பிடிப்பு இப்போது தொடங்க வாய்ப்பில்லை - ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் தொலைக்காட்சி சீரியல் ஷூட்டிங் தொடங்கப்படும் என்றும் சினிமா சூட்டிங் இப்போது தொடங்க வாய்ப்பில்லை என்றும் ஆர்கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

சினிமா படப்பிடிப்பு இப்போது தொடங்க வாய்ப்பில்லை - ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி
  • Share this:
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையை அடுத்த பனையூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இன்று அடிக்கல் நாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

அம்மா படப்பிடிப்பு தளம் கட்டுவதற்கு இரண்டாவது தவணையாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை தமிழக அரசு வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கான ஷூட்டிங் வரும் பத்தாம் தேதி முதல் தொடங்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் நடிகர் நடிகைகளுக்கு கொரோனா பரிசோதனையை விரைவாக முடித்து தர அரசு அனுமதி அளித்துள்ளதால் சிக்கல் எதுவும் இருக்காது.

சினிமா ஷூட்டிங் பெரும்பாலும் வெளியிடங்களில் இருப்பதால் மக்கள் கூட்டம் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே இப்போதைக்கு சினிமா சூட்டிங் நடத்துவதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.


மேலும் படிக்க: பிரபல தயாரிப்பாளரின் தாயார் மரணம் - திரையுலகினர் இரங்கல்








First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading