ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ரோஜா மகள் அன்ஷுமாலிகா? ஆர்.கே.செல்வமணி பதில்

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ரோஜா மகள் அன்ஷுமாலிகா? ஆர்.கே.செல்வமணி பதில்

குடும்பத்தினருடன் செல்வமணி

குடும்பத்தினருடன் செல்வமணி

அன்ஷுமாலிகா ஒரு புதிய தெலுங்கு/தமிழ் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமாவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனது மகள் சினிமாவில் அறிமுகமாவதாக வெளியான தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

  90-களில் முன்னணி இயக்குநராக திகழ்ந்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. பின்னர் FEFSI-யின் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) தலைவராக ஆனார். பல நெருக்கடிகளின் போதும் சினிமா தொழிலாளர்கள் பக்கம் நின்றார்.

  தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்த வரை நடிகை ரோஜாவை 2002-ல் திருமணம் செய்துக் கொண்டார் செல்வமணி. இந்த தம்பதியருக்கு அன்ஷுமாலிகா என்ற மகளும் கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர். அன்ஷுமாலிகா ஒரு வளர்ந்து வரும் விருது பெற்ற எழுத்தாளர், தொழில்முனைவோர் மற்றும் சமூக சேவகர் என பல திறமைகளை தன்னுள் வைத்துள்ளார்.

  30 வருட பந்தம்! க்யூட் அமுல் பேபியாக மணிரத்னம் - ரஹ்மான்! ரசித்து ட்வீட் போட்ட இசைப்புயல்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அன்ஷுமாலிகா ஒரு புதிய தெலுங்கு/தமிழ் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமாவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. தற்போது இந்த செய்தி வெறும் வதந்தி என இயக்குநர் செல்வமணி மறுத்துள்ளார். மேலும், தனது மகள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதாகவும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தான் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் திரும்பி வந்து, நடிக்க ஆசைப்பட்டால், அது குறித்து அப்போது முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Dhruv Vikram, Tamil Cinema