ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமாவில் அறிமுகம் ஆகிறாரா நடிகை ரோஜாவின் மகள்? இயக்குனர் ஆர்.கே. செல்வமணி விளக்கம்

சினிமாவில் அறிமுகம் ஆகிறாரா நடிகை ரோஜாவின் மகள்? இயக்குனர் ஆர்.கே. செல்வமணி விளக்கம்

நடிகை ரோஜாவின் மகள் அன்சு மாலிகா

நடிகை ரோஜாவின் மகள் அன்சு மாலிகா

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ரோஜாவின் மகள் அன்சு மாலிகா சினிமாவுக்கு வருவதாக தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து அவரது தந்தையும் இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

  ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

  அழகூரில் பூத்தவளே... புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

  அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

  ஆன்மாவின் புத்துணர்ச்சி! ரியாஸ்கான் மகனின் நட்புக்கு நெகிழ்ந்த ஜூலி!

  இந்நிலையில் அவரது மகள் அன்சு மாலிகா சினிமாவுக்கு வருவதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து அவரது தந்தையும், இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி கூறுகையில், ‘அன்சு மாலிகா தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் 4 ஆண்டுகள் அவர் அமெரிக்காவில்தான் இருப்பார். அவர் சினிமாவுக்கு வருவதாக சொல்லப்படும் தகவல்கள் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Roja