பிரபல இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி!

பிரபல இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி!

டைட்டில் இறுதி செய்யப்பட்ட பின்னர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைட்டில் இறுதி செய்யப்பட்ட பின்னர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
பிரபல இந்தி படத்தை ஆர்.ஜே.பாலாஜி தமிழில் ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. ரூ.29 கோடி செலவில் முழுநீள காமெடி திரைப்படமாக உருவான இப்படம், ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்நிலையில், இந்தப் படத்தை தமிழில் இயக்க ஆர்.ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளாராம். ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் இதனை உறுதிப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி, "நான் இன்னும் மற்ற நடிகர்களை தேர்ந்தெடுக்கவில்லை. தலைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் படத்தை அறிவிக்கும் போது முறையாக டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் ஏற்கனவே இந்தப் பெயரில் இயக்குநர் பாக்யராஜின் படம் ஒன்று இருப்பதால், தற்போது அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

தவிர, நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ படத்தை ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: